டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகனை இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், , இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் V.நாராயணனை பாராளுமன்ற அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
அவருடன், இந்திய விண்வெளித் துறையின் சாதனைகள் குறித்து கலந்துரையாடி, பாராட்டுக்களை தெரிவித்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்றும் எல்.முருகன் கூறியுள்ளார்.