10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 23-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ – ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை தற்போது வரை நிறைவேற்றவில்லை என ஜாக்டோ-ஜியோ அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 13-ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
சென்னை எழிலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.