மதுரையில் வீட்டுக் கடனை வட்டியுடன் செலுத்தியும், மீண்டும் தவணைத் தொகை செலுத்தத் தனியார் வங்கி அதிகாரிகள் மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்ட தம்பதியினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
மதுரை எஸ்.ஆலங்குளம் பாரதி புரம் பகுதியைச் சேர்ந்த கற்பகம் – கனகபாண்டியன் தம்பதியினர், அங்குள்ள தனியார் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுள்ளனர்.
வட்டியுடன் கடனை திருப்பி செலுத்தியும், மீண்டும் தவணைத் தொகை செலுத்த வற்புறுத்தி வங்கி ஊழியர்கள் வீட்டிற்குச் சீல் வைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் வீட்டு வாசல் முன்பு குடியிருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட தம்பதியினர் வேதனை தெரிவித்துள்ளனர்.