மேட்டுப்பாளையம் அருகே இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியில் இஸ்லாமிய கபர்ஸ்தான் அமைக்க முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை மாவட்டம் தேக்கம்பட்டி ராஜீவ் நகர் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இஸ்லாமியர்களின் உடல்களை அடக்கம் செய்யும் கபர்ஸ்தான் அமைக்க அதிகாரிகள் முயல்வதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் இந்துக்கள் மனு அளித்தனர். இதுகுறித்து பேட்டியளித்த அவர்கள், கபர்ஸ்தான் அமைத்தால் வருங்காலத்தில் மதரீதியான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால், இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.