சென்னை சூளைமேடு அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி இருவர் படுகாயமடைந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
சென்னை சூளைமேடு காவல் நிலையம் அருகே சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
தொடர்ந்து, சாலையோர கடையின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் இருசக்கர வானத்தில் சென்ற பெண் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில், அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர்.