நாக்பூர் கலவரத்தை சுட்டிக்காட்டி, வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், , நாக்பூர் விவகாரத்தில் போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
போலீஸார் விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், அவுரங்கசீஃப் கல்லறையை அகற்றுவது தொடர்பாக தற்போது விவாதிக்க முடியாது என்று கூறினார். இதுபோன்ற விவாதத்துக்கு இது சரியான தருணமல்ல என்றும் சுனில் அம்பேகர் தெரிவித்தார்.