கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்கள் அமைப்போம் என தமிழக பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சீற்றங்களின்போதும், தமிழக பிரச்சினைகளின்போதும், இயற்கைச் பொதுப் மக்களுக்கு உறுதுணையாகக் களத்தில் நின்று, அவர்கள் துயர் துடைத்து, மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் முன்னின்று செயல்படுவது, தமிழக பாஜக சகோதர சகோதரிகளின் இயல்பு என அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும். கோடைக் காலத்தின்போது, தாமாக முன்வந்து, தண்ணீர்ப் பந்தல்களும், மோர்ப் பந்தல்களும் அமைத்து, மக்களின் தாகம் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் நமது சகோதர, சகோதரிகள் இந்த ஆண்டும் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் உன்னதப் பணியில் மீண்டும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக பேருந்து நிறுத்தங்கள், பள்ளிகள், சந்தைகள் என பொதுமக்கள் அதிகம் கூடம் இடங்கள் அருகே தண்ணீர்ப் பந்தல்கள், மோர்ப் பந்தல்களை அமைப்பது, அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் ஒவ்வொரு பூத் அளவிலும் நமது சகோதர சகோதரிகள் தங்களால் இயன்ற அளவில், தண்ணீர்ப் பந்தல்கள், மோர்ப் பந்தல்கள் அமைத்திடுவதோடு, கோடை காலம் முழுவதுமே அவற்றைப் பராமரித்துப் பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என
அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.