கன்னியாகுமரி அருகே இளைஞரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருங்கல் அடுத்த மாதங்கரைப் பகுதியைச் சேர்ந்த சஜின் என்ற இளைஞர் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த ஞாயிறன்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
தொடர்ந்து அவரது நண்பர்களிடம் பெற்றோர் விசாரித்ததில் கடைசியாக சஜின், ராபர்ட் என்பவருடன் மீன் பிடிக்கச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை தீயணைப்புத் துறையினரின் உதவியோடு அருகில் உள்ள குளத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சஜின் குளத்திலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ராபர்ட் உள்ளிட்ட 7 பேர் சஜினை கொலை செய்ததாகக் கூறி உடலை வாங்கமாட்டோம் என உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.