கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை சிபிசிஐடி காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளதாக நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜித்தன் ஜாய் நேரில் ஆஜரானார். மேலும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் சிபிசிஐடி போலீசாரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
வழக்கு குறித்துக் கேட்டறிந்த நீதிபதியிடம், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து அடுத்த மாதம் ஏப்ரல் 25ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.