சீர்காழி அருகே 12ஆம் வகுப்பு பள்ளி மாணவியைத் தெருநாய் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அல்லி விளாகம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியை, தெரு நாய் ஒன்று விரட்டி விரட்டிக் கடித்துள்ளது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் மாணவியைக் காப்பாற்றினர்.
கை, கால்களில் பலத்த காயத்துடன் மாணவி சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வியாழக் கிழமை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்க உள்ள நிலையில், மாணவி படுகாயமடைந்துள்ளது.
பெற்றோரைக் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. அப்பகுதியில் சுற்றித் திரியும் 50-க்கும் மேலான நாய்களைப் பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.