ஹமாசை ஒழிக்கும் வரை இஸ்ரேல் ஓயாது என அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் தனது பாதையை மாற்றும் என்ற நம்பிக்கையில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை நிறுத்தியதாகப் பதிவிட்டுள்ள நெதன்யாகு, தற்போது மீண்டும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், இஸ்ரேலுக்கு அசைக்க முடியாத ஆதரவு அளித்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பெஞ்சமின் நெதன்யாகு பதிவிட்டுள்ளார்.