ஈரோட்டில் காரை வழிமறித்து ரவுடி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அவையில் பேசிய அவர்,
தமிழகத்தில் நேற்று மட்டும் 4 கொலைகள் அரங்கேறி இருப்பதாகவும், சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என முதலமைச்சர் கூறிய அதே நேரத்தில் கொலைகள் நடந்திருப்பதாகவும் விமர்சித்தார்
தமிழக மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் இருப்பதாகத் தெரிவித்த இபிஎஸ், அன்றாட நிகழ்வாகத் தமிழகத்தில் கொலை சம்பவங்கள் நடந்துவருவதாகக் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரின் விளக்கத்தைக் கேட்க மறுத்து வெளிநடப்பு செய்தனர்.