ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்துக்காக புதிய கடல் பாலம் கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்குவதற்கான புதிய ஜெட்டி பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு ரூ.6.43 கோடி மதிப்பில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
அக்னி தீர்த்த கடற்கரை அருகே அமையவுள்ள ‘டி’ வடிவிலான புதிய ஜெட்டிப்பாலம் 119 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகமும், 6 அடி உயரமும் உடையது. இதன் முதல் கட்ட பணியாக கடலுக்குள் இயந்திரங்களை நிறுத்த தேவையான நகர்வு மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தற்போது, இந்த மேடைக்கான பாகங்கள் பொருத்தும் பணி ஓலைக்குடா பகுதியில் முழுவீச்சில் நடந்து வருகிறது. பின்னர் கடலுக்குள் கான்கிரீட் பில்லர் அமைக்கும் பணிகளை தொடர்ந்து, பால கட்டுமான பணிகள் நடைபெறும்.
புதிய ஜெட்டி பாலத்தின் பணிகள் இயற்கையின் கால சூழலுக்கு ஏற்றவாறு நடைபெறும் என்பதால், இந்தாண்டு இறுதியில் நிறைவு பெற வாய்ப்புள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்தனர்.