நெல்லையில் ஓய்வுப்பெற்ற எஸ்.ஐ. படுகொலை சம்பவம் தொடர்பாகக் காவல் உதவி ஆணையர் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை டவுண் பகுதியில் நேற்று முன் தினம் ஓய்வுபெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஜாகிர் உசைன், மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், நிலப் பிரச்சனை காரணமாகக் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதற்கிடையே தனக்குக் கொலை மிரட்டல் வருவதாகவும், இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டி அவர் பதிவுசெய்திருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாகக் காவல் உதவி ஆணையர் செந்தில்குமார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.