திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பேக்கரியில் இருந்து வாங்கிய பன்னில் பல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கேயம் சாலையில் செயல்பட்டு வரும் ஜே.கே.கேக் ஷாப் என்ற பேக்கரியில் இருந்து பெண் ஒருவர் பன் வாங்கியுள்ளார். அதனை குழந்தைக்கு கொடுத்த தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் பல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து பேக்கரி உரிமையாளரிடம் கேட்டபோது முறையாகப் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பேக்கரியின் பின்புறம் சென்ற பெண் உணவு தயாரிக்கும் இடத்தில் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.