தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட டீ-சர்ட் அணிந்து மக்களவைக்குச் சென்ற திமுக எம்.பி.க்களுக்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர்.
ஆனால் மத்திய அரசு விவாதிக்க மறுத்த நிலையில், நாடாளுமன்றம் முன்பு நேற்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராகத் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட் அணிந்தபடி திமுக கூட்டணி எம்.பி.க்கள் மக்களவைக்கு வருகை தந்தனர்.
அவை நடவடிக்கை தொடங்கியவுடன் விவாதம் நடத்தக்கோரி அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், திமுக கூட்டணி எம்.பி.க்கள் அவை மாண்பை மீறியதாகவும், வாசங்கள் அடங்கிய உடையை அணிந்து வந்தது ஏற்புடையதல்ல எனவும் மக்களவை சபாநாயகர் எச்சரித்தார்.
அத்துடன் திமுக எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்தனர்.