இரயில் நிலையங்களில் பயணிகளின் செல்போனை திருடுவதையே தொழிலாக செய்து வந்த நபரைக் கும்பகோணம் இரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த ஜனவரி மாதம் சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கும்பகோணம் ரயில் நிலையம் வந்தபோது அவரது செல்போன் திருடு போனது.
அங்கிருந்த சிசிடிவி காட்சியில் கிருஷ்ணமூர்த்தியின் செல்போனை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த இசக்கிதாஸ் என்பவர் திருடியது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில், இசக்கிதாஸை தேடி வந்த கும்பகோணம் இரயில்வே போலீசார், கரூரில் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.