தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு என்றைக்கு வருகிறதோ அன்று தமிழ்நாட்டில் எல்லா மொழிகளும் கற்கும் நிலை உருவாகும் எனவும் டாஸ்மாக் என்ற பேச்சுக்கு இடமில்லாத அளவிற்கு தமிழ்நாடு மாறும் என்றும் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டார்.
அப்போது பேசியவர், சட்டமன்றத்தில் வேண்டுமானால் எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கலாம், ஆனால் தமிழ்நாடு களத்தில் எதிர்க்கட்சி பாஜக தான் எனக் கூறினார்.
பாஜக ஆட்சிக்கு என்றைக்கு வருகிறதோ அன்று தமிழ்நாட்டில் அனைத்து மொழிகளும் கற்கும் நிலை உருவாகும், டாஸ்மாக் என்ற பேச்சுக்கே இடமில்லாத அளவிற்கு தமிழ்நாடு மாறும் எனவும் தெரிவித்தார்.