பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்ப்பதாக எழுந்த புகாரின் பேரில் மத்திய புலனாய்வு துறை அவரை கைது செய்தது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் மாநில, மத்திய மற்றும் ராணுவ புலனாய்வு அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்த தீப் ராஜ் சந்திரா கைது செய்யப்பட்டார்.
இவர் உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்தவர் என்பதும் பணி புரிவதற்காக பெங்களூருவிற்கு குடி பெயர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. பாகிஸ்தானில் உள்ள முகவர்களுடன் தொடர்பு கொள்ள, வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை தீப் ராஜ் சந்திரா பயன்படுத்தியிருக்கலாம் என்று புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.
மேலும் மின்னஞ்சல் மூலம் ரகசிய தகவல்களை பரிமாறிக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. தீப் ராஜ் மட்டுமின்றி மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.