உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 8ஆவது முறையாக முதலிடத்தில் உள்ளது.
சா்வதேச மகிழ்ச்சி தினமான மாா்ச் 20ஆம் தேதியன்று உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான தரவரிசை பட்டியலை லண்டன் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தின் மக்கள் நலன் ஆராய்ச்சி மையம், ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான தீா்வு அமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்டன.
அதில், உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 8ஆவது முறையாக முதலிடத்தில் உள்ளது.
டென்மாா்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், நெதா்லாந்து நாடுகள் அடுத்தத்தடுத்த இடங்களில் உள்ள நிலையில உள்ளன.