சென்னை வண்ணாரப்பேட்டையில் திருமணமாகி ஒரு வருடமே ஆன பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவனை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2023-ஆம் ஆண்டு துர்கா ஸ்டாலின் முன்னிலையில், அமைச்சர் முத்துசாமியின் உதவியாளர் மகன் தானேஸ்வரனுக்கும், சுவாதி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து கேட்டு சுவாதி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், சுவாதி தனது தாய் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். சுவாதியின் மரணத்திற்கு அவரது கணவர்தான் காரணம் என குற்றம்சாட்டி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.