WTT ஸ்டார் கன்டென்டர் பேட்மிண்டன் தொடரில் இந்தியா சார்பில் 19 வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.
WTT ஸ்டார் கன்டென்டர் 2025 தொடரானது, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மனுஷ் ஷா, தியா சித்தலே, தென் ஆப்பிரிக்காவின் பார்க் கேங்க்யான் உள்ளிட்ட பல நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது.
அதிக அளவிலான வீரர்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தவும், வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகளுக்கு வாய்ப்பளிக்கவும் வைல்டு கார்டு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. WTT ஸ்டார் கன்டென்டர் தொடரில் 19 இந்திய வீரர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.