தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஊர்த் தலைவர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய ஆத்திரத்தில் நாட்டாமையைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவிற்குப் பந்தல் அமைப்பவர் உட்பட பல்வேறு நபர்களிடம் ஊர்த் தலைவர் சக்திவேல் கமிஷன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனால், ஆத்திரம் அடைந்த சக்திவேல் ஊர் நாட்டாமையைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த கிராம மக்கள் ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.