தங்கக் கட்டிகளைத் தருவதாகக் கூறி ஏமாற்றி 48 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றிய புகாரில், இருவரை ராஜபாளையம் காவல்துறை கைது செய்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்குக் குறைந்த விலையில் தங்கக் கட்டிகள் விற்பனைக்கு இருப்பதாக இணையத்தில் விளம்பரம் வந்துள்ளது.
விளம்பரத்திலிருந்த எண்ணில் தொடர்பு கொண்ட முத்துக்குமாரிடம் பேசிய அடையாளம் தெரியாத நபர், 48 லட்சம் ரூபாயுடன் ராஜபாளையத்திற்கு அழைத்துள்ளார்.
அங்கு அவரை ஏமாற்றி பணத்துடன் தப்பிய கருப்பையா மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்தனர்.