திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பேரணி நடத்த அனுமதி வழங்கக்கூடாது எனத் தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
இதனை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.