நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே முக கவசம் அணிந்தபடி இரவு நேரத்தில் திருட்டில் ஈடுபடும் 4 சிறுவர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி பாளையத்தில் அறிவழகன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த கார்மெண்ட்ஸ் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து வீட்டிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, 4 சிறுவர்கள் முகமூடி அணிந்தபடி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், சிறுவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.