இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சாலை சீரமைக்கப்படாததால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளதாகப் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
பான்டுகுடி கிராமத்திலிருந்து மங்கலக்குடி செல்லும் சாலையை சீர்மைக்குப் பணி 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், சாலையில் அமைக்கப்பட்டிருந்த 4 பாலங்கள் உடைக்கப்பட்டுப் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதனால், பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாகவும், அரசுப் பள்ளிக்கு அருகே பெரிய பள்ளங்கள் உள்ளதால் மாணவர்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.