அன்னவாசல் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே கலங்காத கண்ட அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் கலந்து கலந்து கொண்டனர். இந்த போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.