திருவள்ளூரில் இருசக்கர வாகனத்தைத் திருடிவிட்டு வேகமாகச் சென்ற நபர் வேகத்தடையில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வேகத்தடையில் மோதியது. இதில் வாகனத்தில் சென்ற ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் ஓட்டிச் சென்றது இந்திரா நகர்ப் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவருடைய வாகனம் என்பது தெரியவந்தது. வாகனத்தைத் திருடிச் செல்லும் வழியில் ஆறுமுகம் வேகத்தடையில் மோதி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.