வருச நாடு வனப்பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மூல வைகை ஆற்றில் இன்னும் 10 நாட்களில் தண்ணீர் வறண்டுவிடும் என மயிலாடும்பாறை ஊராட்சி தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா மேகமலை அடர் வனப்பகுதியில் உற்பத்தியாகும் மூல வைகை ஆறு, வைகை அணையின் பிறப்பிடமாக விளங்கி வருகிறது.
வருச நாடு வனப்பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மூல வைகை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வருவதாகவும், இன்னும் 10 நாட்களில் தண்ணீர் முழுவதுமாக வற்றி, ஆறு வறண்டு விடும் எனவும் மயிலாடும்பாறை ஊராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஆற்றுப் பகுதிகளில் உள்ள உறைக் கிணறுகளிருந்து வழங்கப்படும் குடிநீரைக் கிராம மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.