மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக விவசாய குறைதீர் கூட்டத்தில் சேதமடைந்த நெல்லுடன் வந்து ஆட்சியரிடம் கண்ணீர் மல்க விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அய்யங்கோட்டை பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரி முத்துவேல் மீது விவசாயி முருகன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
40 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல்லுக்கு 70 ரூபாய் கேட்பதோடு, கொள்முதல் நிலைய அலுவலர் தனியாகக் கொள்முதல் நிலையத்தை அமைத்து நெல் கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் கண்ணீர் மல்கப் புகார் அளித்தார்.
இதனால், நெல் முளைத்தும், வெடித்தும் வீணாவதாகவும் கூறினார். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில் ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகளும் லஞ்சம் பெற்றுவிட்டதால் தன்னை எதுவும் செய்ய இயலாது எனக் கூறுவதாகவும் ஆட்சியரிடம் விவசாயி தெரிவித்தார்.