ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சியில் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் தீர்மான நகல்ளை செயல் அலுவலர் கொடுக்காததால் திமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 கவுன்சிலர்கள் கொண்ட கொடுமுடி பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த திலகவதி என்பவர் பேரூராட்சி தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.
இவர் மீது அனைத்து கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். தொடர்ந்து திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் இணைந்து பேரூராட்சி தலைவர் திலகவதி மீது நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து பேரூராட்சி தலைவர் திலகவதி மீது நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் பேரூராட்சி அலுவலகத்தில் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 12 கவுன்சிலர்கள் பங்கேற்று திலகவதிக்கு எதிராக வாக்களித்ததால் அவர் தோல்வியை தழுவினார். தொடர்ந்து நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தொடர்பான தீர்மான நகலைப் பேரூராட்சி செயல் அலுவலர் வழங்காததால், திமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.