விஜய் நடிப்பில் வெளியான ‘சச்சின்’ திரைப்படம் ஏப்ரல் 18-ம் தேதி ரீரிலீஸ் செய்யப்படும் என அதிகாரபூர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள், டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் நடிகர் விஜய்யின் ‘சச்சின்’ திரைப்படத்தை ரீரிலீஸ் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், திரைப்படத்தின் ரீரிலீஸ் தேதியைப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.