இத்தாலியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவின்போது சுற்றுலாப் பயணிகள் அதிர்ஷ்டவசமாகக் காயங்களின்றி உயிர் தப்பினர்.
தெற்கு டைரோலில் உள்ள பனி படர்ந்த மலைப்பகுதியில், திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் பனி மேகங்கள் சூழ்ந்ததைப் போல் காட்சியளித்தன.
பனிச்சரிவின் தாக்கம் சாய்தள பகுதியை அடையாததால் கீழே பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் காயங்களின்றி உயிர் தப்பினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.