உத்தரப் பிரதேசத்தில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த பேராசிரியர் 72 மணி நேரத்திற்குப் பின் கைது செய்யப்பட்டார்.
ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த ரஜ்னீஷ் குமார், கடந்த 20 ஆண்டுகளாக பல மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகப் புகார் எழுந்தது.
அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதனடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் கல்லூரி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்தது. தொடர்ந்து தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்த நிலையில் 72 மணி நேரத்திற்குப் பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.