நாகரீகமற்ற அரசியல் செய்வது திமுகவினரின் அடிப்படை குணம் என்பதை அவர்கள் தொடர்ந்து நிரூபித்து வருவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் வடமாநிலங்களை இழிவுபடுத்தும் வகையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கருத்து தெரிவித்தார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா,
நாகரீகமற்றவர்கள் என விமர்சித்தால் திமுகவினர் ஓலமிட்டு ஒப்பாரி வைப்பதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், நாகரீகமற்ற அரசியல் செய்வதுதான் தங்கள் குணம் என்பதை திமுகவினர் தொடர்ந்து நிரூபித்து வருவதாகவும் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.