செந்தில் பாலாஜி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
Jul 23, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செந்தில் பாலாஜி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Murugesan M by Murugesan M
Mar 21, 2025, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ஒரே வழக்காக விசாரிப்பதற்கு எதிரான மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் அனைத்தையும் சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன் விசாரணையில் ஆஜரான மனுதாரர் தரப்பில், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனர், நடத்துனர், அலுவலக உதவியாளர் என வெவ்வேறு பதவிகளுக்குப் பணம் பெற்றது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைச் சேர்த்து விசாரித்தால், வழக்கு விசாரணை முடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஓட்டுனர் பணிக்குப் பணம் பெற்ற வழக்கு, நடத்துனர் பணிக்குப் பணம் பெற்ற வழக்கு என ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித்தனியாக வழக்குகளை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில், வழக்கின் குற்றச்சாட்டுக்கள் ஒரே மாதிரியானவை என்றும், வழக்குகளைச் சேர்த்து விசாரிப்பது என்பது சிறப்பு நீதிமன்றத்தின் முடிவு எனவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், வழக்குகளை ஒன்றாக விசாரிக்க வேண்டும் எனக் குற்றம் சாட்டப்பட்டவர் கேட்கவில்லை என்றும், வழக்குகளை தனித்தனியாக விசாரித்தால் விசாரணை தாமதமாகும் என்பதால், சேர்த்து விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரிதான் எனவும் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்Senthil Balaji case verdict postponed!
ShareTweetSendShare
Previous Post

நகர்மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒப்பந்ததாரர்!

Next Post

நாகரீகமற்ற அரசியல் செய்வது திமுகவினரின் அடிப்படை குணம் : ஹெச்.ராஜா

Related News

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி – தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவு – காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்!

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies