திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தனர்.
அண்ணாமலையார் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். அந்தவகையில், நடிகர் ஸ்ரீகாந்த் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதேபோல், நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சம்மந்த விநாயகர், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் ஆகியோரை சாமி தரிசனம் செய்தார். அவருக்கும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் கொடுக்கப்பட்டது..