சென்னையில் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை OMR சாலை சோழிங்கநல்லூரில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வரும் இளம்பெண், கடந்த 17ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இளம்பெண்ணின் செல்போனை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பி சென்றுள்ளனர்.
இதேபோல் சோழிங்கநல்லூர் குமரன் நகர் சிக்னல் அருகே நின்று கொண்டிருந்த இளைஞரிடமிருந்தும் ஒரு செல்போனை பறித்து சென்றனர்.
இதையடுத்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் தமிழரசன், தமிழ்செல்வன் ஆகியோர், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.