தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு உச்சத்தில் உள்ளதாகவும், மாநிலத்தில் படுகொலைகள் சாதாரணமாகி விட்டதாகவும், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி மறு சீரமைப்பு குறித்து தற்போது பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
தொகுதி மறு சீரமைப்பு குறித்து குடியரசு தலைவரோ, பிரதமரோ பேசவில்லை என்றும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் 700 கொலைகளுக்கு மேல் நடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு உச்சத்தில் உள்ளதாகவும், திருச்செந்தூர் கோயிலுக்கு ஷிவ் நாடார் கொடுத்த ரூ.300 கோடி என்ன ஆனது? என்றும் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.