சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறியதாக வடமாநில இளைஞரை பொதுமக்கள் தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரியும் பெண் ஒருவர் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.
நகரும் படிக்கட்டில் ஏறியபோது வடமாநில இளைஞர் ஒருவர் அவரிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கிய பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.