சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ரவுடி மனோ கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஊரணி பகுதியை சேர்ந்த ரவுடி மனோ என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் ரவுடி மனோவை 3 பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றது. தொடர்ந்து தப்பியோடிய கொலையாளிகளை போலீசார் விரட்டிச் சென்றனர்.
அப்போது சிராவயல் காட்டுப்பகுதியில் காரை நிறுத்தி விட்டு தப்பியோடிய குரு பாண்டியன், விக்னேஷ், சக்திவேல் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் தந்தையின் கொலைக்குப் பழிதீர்ப்பதற்காக ரவுடி மனோவை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.