தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக அரசு மருத்துவக்கல்லூரி வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.
குழந்தைகள் வார்டு, ரத்த வங்கி உள்ளிட்ட பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, மருத்துவர்களும், நோயாளிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதேபோல், தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தென்பாகம் காவல்நிலையத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனைத்தொடர்ந்து, கோப்புகளைப் பத்திரப்படுத்தும் பணிகளில் காவலர்கள் ஈடுபட்டனர்.