டெல்லியைச் சேர்ந்த இளைஞர் காணாமல்போன தனது செல்ல பிராணியை மனம் தளராமல் தேடிக் கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாசமாக வளர்த்த சார்லி என்ற நாய் காணாமல் போனதால், நாயின் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டி அதனைத் தொடர்ந்து தேடி வந்துள்ளார்.
விடா முயற்சியின் பலனாக சார்லி உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் இருப்பது இளைஞருக்குத் தெரியவந்தது. அங்கு சென்ற அவரை கண்ட நாய், ஓடி வந்து ஆரத்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.