மேற்குவங்கத்தில் தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. ஹவுராவில் துல்கர் அருகே தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
அங்கு திடீரென மளமளவெனத் தீப்பற்றி எரிந்தது. இதனையறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.