தாம்பரம் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கும் மின் மயானத்தால் மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் பாலாஜி அவன்யூ பகுதியில் மின் மயான பூமி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்காங்கே சேகரிக்கப்படும் மரக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.
இதனால் சருகுகள் காய்ந்து தீப்பற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், குடியிருப்புக்கு மத்தியில் இருக்கும் இந்த மின் மயானத்தில் எரியூட்டப்படும் உடல்களிலிருந்து வெளியேறும் சாம்பல்கள் இயந்திர கோளாறால் வீடுகளில் பரவுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்குச் சென்ற தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மூன்று நாட்களில் சரி செய்யப்படும் எனக் கூறியதாகவும், ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லையெனத் தெரிவித்துள்ளனர்.