புதுக்கோட்டை அருகே தனியார் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான செயற்கைக்கோள் ட்ரோன், தொழில்நுட்ப உதவியுடன் செலுத்தப்பட்டது.
லேனா விலக்கு பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி மாணவர்கள் தயாரித்த சிறிய அளவிலான செயற்கைக்கோள்கள் இந்தியாவிலேயே முதன் முறையாக ட்ரோன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன.
இதுவரை செயற்கைக்கோள்கள் ராக்கெட் அல்லது ஹீலியம் பலூன் மூலமாகச் செலுத்தப்பட்ட நிலையில் தற்போது ட்ரோன் மூலம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.