நெல்லை மாவட்டம் காவல் கிணறு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையைச் சேர்ந்த நாகராஜன், தனது நண்பர் வினோத்துடன் காவல் கிணறு சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்.
குமாரபுரம் சந்திப்பில் சென்றபோது இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த கார் மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.