வெள்ள நிவாரண நிதி முழுமையாக வழங்கப்படாததைக் கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விடுபட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரியைத் தொடர்பு கொண்டால் முறையான பதில் அளிக்கவில்லை எனக் குற்றம் சாட்டிய விவசாயிகள், வெள்ள நிவாரண நிதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.