சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மது போதையில் டீக்கடையை சூறையாடிய நபரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாஸ்தா நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக முருகன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடையில் சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரை முருகனின் மனைவி வெளியே போகுமாறு கூறியுள்ளார்.
அப்போது, மது போதையிலிருந்த தீனதயாளன் என்பவர் ஆபாச வார்த்தைகளால் முருகனின் மனைவியைத் திட்டி, கடையின் உரிமையாளரான முருகனையும் கடுமையாகத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பின்னர், கடையிலிருந்த பொருட்களையும் சூறையாடினார். அப்போது, அங்கு வந்த காவலர் ஒருவர் தீனதயாளனைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். காயமடைந்த முருகன் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.